பெரம்பலூரில் 300 கிலோ வெங்காயம் திருட்டு! சோகத்தில் விவசாயி

  • News18
  • Last Updated :
  • Share this:
பெரம்பலூர் மாவட்டம் படாலூரில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ளது. 

தமிழக அளவில் சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர்மாவட்டம் முன்னிலை பெற்று வருகிறது. ஆண்டு தோறும் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 50 முதல் 60 ஆயிரம் டன் வரை சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர், நாட்டார்மங்கலம், எசனை, கூத்தனூர் மற்றும் செட்டிகுளம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் அதிகளவு உற்பத்தி செய்து வருகின்றனர். தற்பொழுது சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வரும் நிலையில் சின்ன வெங்காயத்திற்கு தட்டுப்பாடும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் நாட்டார்மங்கலம் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற விவசாயி தனது நிலத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்காக 1500 கிலோ சின்ன வெங்காயத்தை ரூ.1.50 லட்சத்திற்கு வாங்கி வைத்து தனது வயலில் இருப்பு வைத்துள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் இன்று அதிகாலையில் வயலுக்குச் சென்று வயலில் இருந்த 50 கிலோஎடை கொண்ட சின்ன வெங்காயம் 6 மூட்டைகளை திருடிச் சென்றுவிட்டனர்.ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள சின்ன வெங்காயத்தை பறிகொடுத்த முத்துகிருஷ்ணன் இதுகுறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரைப் பெற்ற பாடாலர் போலீசார் இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் முத்துக்கிருஷ்ணன் வயலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயத்தை திருடி சென்ற மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர். இச்சம்வத்தினால் பெரம்பலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also see:

Published by:Karthick S
First published: