• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வெங்காய விலை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்படுமா?.... அமைச்சர் செல்லூர் ராஜு பதில்

வெங்காய விலை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்படுமா?.... அமைச்சர் செல்லூர் ராஜு பதில்

வெங்காயத்தை பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜூ தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வெங்காய விலை உயர்வானது கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜூ தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெய்யும் கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில் வெங்காயத்தின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், வெங்காய விலையை கட்டுப்படுத்துவது குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், நேற்று (4.11.2019) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செல்லூர் ராஜூ விடுத்துள்ள அறிக்கையில், வெங்காய விளைச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள தற்காலிக விலை உயர்வைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளர்களும், வெங்காயம் கையிருப்பு வைத்திருந்தால் அவர்கள் மீதும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் சென்னையிலுள்ள நுகர்பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், வெங்காய விலை உயர்வினை கட்டுப்படுத்தும் பொருட்டு மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் பகுதியிலுள்ள வெங்காய மொத்த விற்பனை நிலையங்களில் தரமான வெங்காயத்தினை
    கொள்முதல் செய்திட தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள் நாசிக் புறப்பட்டுச் சென்றுள்ளனர். நாசிக் பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தினை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்திலுள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நடவடிக்கைகள் மூலமாக தற்காலிக வெங்காய விலை உயர்வானது கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: