வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் வெங்காய விலை குறைவு...!

எகிப்தில் இருந்து இறக்குமதி செய்து தட்டுப்பாட்டை போக்கவும், கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலமாக கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் வெங்காய விலை குறைவு...!
வெங்காயம்
  • News18
  • Last Updated: October 22, 2020, 7:47 PM IST
  • Share this:
வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் சென்னையில் வெங்காயம் விலை சற்று குறைந்து கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அண்ணாநகர் பசுமை அங்காடியில் கிலோ வெங்காயம் 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தமிழகத்திற்கு வெங்காயம் வரத்து குறைந்தது. இதனால் வெங்காயத்தில் விலை கடந்த சில வாரங்களாக அதிரித்து சில்லறை விற்பனையில் கிலோ 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்து தட்டுப்பாட்டை போக்கவும், கூட்டுறவு விற்பனை மையங்கள் மூலமாக கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Also read... புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!இந்த நிலையில் மகாராஷ்டிராவின் நாசிக் சந்தையில் இருந்து வெங்காய லோடு வரத்தொடங்கியுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் விலை சற்று குறைந்து கிலோ 80 ரூபாய்க்கும்,பெல்லாரி வெங்காயம் மற்றும் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதேபோல் சின்ன வெங்காயமும் விலை குறைந்து கிலோ 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிலையில், சென்னை அண்ணாநகர் பசுமை பண்ணை அங்காடியில் 45 ரூபாய் வெங்காயம் வரவில்லை என்று கூறி கிலோ 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். திட்டம் தொடங்கிய இரண்டாவது நாளிலேயே கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, திண்டுக்கல்லில் வாரத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் வெங்காய பேட்டை சந்தைக்கு எகிப்திலிருந்து 50 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிர வெங்காயங்கள் கிலோ 80 ரூபாய்க்கும், எகிப்து வெங்காயம் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மழை நீடித்தால் வெங்காயத்தின் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading