• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இப்பெல்லாம் இட்லி பொடிய வச்சுக்கிறோம்! வெங்காய விலை உயர்வு குறித்த பெண்களின் கண்ணீர்குரல்

இப்பெல்லாம் இட்லி பொடிய வச்சுக்கிறோம்! வெங்காய விலை உயர்வு குறித்த பெண்களின் கண்ணீர்குரல்

தமிழக அரசு காமதேனு பல்பொருள் அங்காடிகளில் 40 முதல் 50 ரூபாய்க்கு வெங்காயம் விற்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வெங்காய விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘நான் வெங்காயம் உண்பதில்லை. அதனால், வெங்காயத்தின் விலை உயர்வுகுறித்து எனக்குத் தெரியவில்லை’ என்று தெரிவித்திருந்தார். அவருடைய பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

வெங்காய விலை உயர்வால் நடுத்தர மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளை எடுத்து விளக்குகிறது. இல்லத்தரசிகள் தங்களது பிரச்னைளை விளக்குகின்றனர்.

"பிரியாணி பண்ணலப்பா, வாரவாரம் எங்க வீட்ல பிரியாணி பண்ணுவோம். ஒரு மாசமா பிரியாணியே நாங்க பண்ணல. ஏன்னா வெங்காயம் இல்ல. வெங்காயம் இல்லாத நாங்க எப்டி பிரியாணி செய்றது" என்கிறார் சிறு உணவு கடை வைத்திருக்கும் விஜயலட்சுமி.அதிகப்படியான மழை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் 20 ரூபாய் இருந்த வெங்காயம் சராசரியாக 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

"நாங்க காய்கறியெல்லாம் வாங்குனா 50 ரூபாய்க்குள் முடிச்சுக்குவோம். தக்காளி, வெங்காயம் தேவையானது பத்து பத்து ரூவாய்க்கு வாங்கி ஒரு வேள சமச்சவங்க, ஒரு கிலோ வெங்காயம் 200 ரூவாய்க்கு வாங்கி ஒரு மாசத்துக்கு ஓட்டிரலமானு இருக்கு" என்கிறார் தினக் கூலி அடிப்படையில் வேலைக்கு செல்லும் செல்லும் ரமணி.இந்த வெங்காய விலையை சமாளிக்க இந்திய அரசு வெங்காய ஏற்றுமதியை தடை செய்து எகிப்து மற்றும் துருக்கியிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது.

"டிப்பன் கட வச்சிருக்கேன். எல்லாரும் காரச்சட்னிதான் கேக்குறாங்க. காரச்சட்னியே போடுறதில்ல. வெங்காயம் போட்டாத்தானே காரச்சட்டனி போட முடியும். வெறும் ஒடச்ச கடல, தேங்கா சட்ணிதான் போட்டுக்கிட்டு இருக்கேன். ஒருநாளைக்கு 200- 300ரூவாதான் வருமானமே கெடைக்கிது. ஒரு கிலோ வெங்காயமே 200 ரூவா குடுத்து வாங்கிட்டு என்ன பன்றது சொல்லு" எனக் கேட்கிறார் விஜயலட்சுமி

தமிழக அரசு காமதேனு பல்பொருள் அங்காடிகளில் 40 முதல் 50 ரூபாய்க்கு வெங்காயம் விற்கிறது."காமதேனு சூப்பர் மார்க்கெட்ல இந்த வெங்காயம் 40 ரூவா. இது ஒரு நேரத்துல நாங்க சமைக்கவே மாட்டோம். இப்ப சூழ்நில இதான் சமைக்கிறோம். இதுக்குள்ள ஒன்னுமே கெடையாது. வெங்காய தாள்தான் இருக்கு. இது காரமே இருக்காது இது வேஸ்ட்டு. நல்ல வெங்காயம் பாத்து ஒரு மாசம் ஆச்சு. இதுக்கு போயி முந்தா நேத்து நாங்க கியூல நின்னோம். எல்லாம் உழுந்து பெறன்டு, அடிச்சுகினு வாங்கி வந்தாங்கோ, முடியெல்லாம் பிச்சிக்கினு, துணிக்களையெல்லாம் பிச்சுக்குனு, ஒருத்தருக்கு கம்மலே டாரா வந்துருச்சு. எனக்கு 48 வயசுக்கு ஆகிடுச்சு. பஸ்ட்டு டைம் 1 கிலோ வெங்காயம் 200ருவான்னு பாக்குறேன்" என்கிறார் ரமணி

சிறையில் இருந்து வெளியே வந்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் ஆளும் அரசு வெங்காய விலை உயர்வை முன் கூட்டியே கனித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார்."எங்க வீட்டுல 5 பேர் இருக்கோம். எங்க மருமக இவ்ளோ இவ்ளோ வெங்காயம் போட்டு சமயல் செய்வா. இப்ப வெங்காயத்த எடுக்குறதுக்கே பயப்பட்றா. " என்கிறார் லட்சுமி

அரிசி, கோதுமை போன்ற தானியங்களை முன்கூட்டியே சேமித்து வைக்கலாம். ஆனால், எளிதில் அழுகிப்போகும் வெங்காயத்தை சேமித்து வைக்க முடியாது என ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

"முன்னாடி ஒரு நேரம் கொளம்பு வச்சு மூனு நேரமும் வச்சுக்குவோம். இப்ப ஒரு நேரம் கொளம்பு வச்சு நைட்டுக்கு சட்னி அரைக்கிறோம். கொழந்தைங்களுக்கு நைட்டு சட்ணி ஜீரனம் ஆக மாட்டிங்கிதே. ஒரு சில நேரத்துக்கு இட்லி பொடி வச்சுக்கிறோம்." என்கிறார் ஸ்டெல்லா.

பாராளுமன்றத்தில் உறுப்பினர் சுப்ரியா சூலே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் வெங்காயம் அதிகமாக பயன்படுத்தாத குடும்பத்தைச் சார்ந்தவர் எனக் கூறினார்.

"வெங்காயம் இல்லனா சமயலே கெடையாது." என்கிறார் விஜயலட்சுமி. "உப்மாசெய்றதுக்கும் வெங்காயம் போடனும், மேகி செய்றதுக்கும் வெங்காயம் போடனும். கரி மீன் வாங்குறதா வெங்காயம் வாங்குறதா" என்கிறார் மேகலை.

இவ்வாறு வெங்காய விலை உயர்வால் சமையல் செய்வதற்கு தினசரி சந்திக்கும் சவால்களை பெண்கள் வேதனையுடன் பகிர்ந்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: