வரத்து குறைந்தது - சென்னையில் வெங்காயம் விலை உயர வாய்ப்பு

வரத்து குறைந்தது - சென்னையில் வெங்காயம் விலை உயர வாய்ப்பு

வெங்காய விலை அதிகரிப்பு (கோப்பு படம்)

வெங்காயத்தை போலவே கேரட் வரத்தும் குறைந்துள்ளதால், சில்லரை கடைகளில் கிலோ 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவை விலையும் உயர்ந்துள்ளது.

  • Share this:
சென்னையில் மொத்த மார்க்கெட்டில் வெங்காய வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.  சென்னையில் உள்ள மொத்த மார்க்கெட்டில் வெங்காய வரத்து கடந்த வாரத்தை விட 25 சதவிகித அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், வரும் வாரம் வெங்காயத்தின் விலை 10 முதல் 15 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, 50 ரூபாய் வரை விற்கப்படும் வெங்காயம், சில்லரை கடைகளில் கிலோ 80 ரூபாய் வரை விற்க வாய்ப்புள்ளது. அதேசமயம், வெங்காயத்திற்கு ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்துள்ளதால் அடுத்தடுத்த வாரங்களில் வரத்து அதிகரித்து இந்த விலை குறையும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

ALSO READ |  கட்டுப்பாடுகளுடன் கோயம்பேடு சந்தை திறப்பு - பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

வெங்காயத்தை போலவே கேரட் வரத்தும் குறைந்துள்ளதால், சில்லரை கடைகளில் கிலோ 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவை விலையும் உயர்ந்துள்ளது.
Published by:Sankaravadivoo G
First published: