• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மீண்டும் உச்சத்தை தொட்ட வெங்காய விலை!

மீண்டும் உச்சத்தை தொட்ட வெங்காய விலை!

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னை கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் கிலோவுக்கு 80 ரூபாயை தொட்டுள்ளது.

    வடமாநிலங்களில் மழைப் பொழிவு காரணமாகவும், விளைச்சல் குறைவு காரணமாகவும் வெங்காயம் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக 80 ரூபாய் வரைக்கும் விலை உயர்வை தொட்ட வெங்காயம் தற்போது அதே விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என கோயம்பேடு வெங்காயம் வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் செல்வராஜ் கூறியுள்ளார்.

    கடந்த வாரத்தை பொருத்தவரை நாசிக் வெங்காயம் 50 ரூபாய் என்ற விலையிலும் ஆந்திரா வெங்காயம் 30 ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது ஆனால் தற்போது நாசிக் வெங்காயம் 60 முதல் 65 ரூபாய் வரைக்கும் ஆந்திரா வெங்காயம் 40 லிருந்து 45 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சின்ன வெங்காயத்தின் விலை 80 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதேபோல் கோயம்பேடு வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் செல்வராஜ், ‘காய்கறிகளை என்றுமே பதுக்கி வைக்க இயலாது. பதுக்கல் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்வதாக சொல்வது தவறான கருத்து. மழையின் காரணமாகவும், விளைச்சல் குறைவின் காரணமாகவும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கிறது. ஒரு நாளுக்கு மேல் அதனுடைய விலையை கட்டுக்குள் வைக்க முடியாது’ என்று கூறியுள்ளார்

    குறிப்பாக அனைத்து காய்கறிகளும் தற்போது விலை ஏற்றத்துடன் காணப்படுவதாகவும் தக்காளி கிலோ 30 லிருந்து 35 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: