• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கனமழை! தமிழகத்தில் வெங்காயம், தக்காளி விலை உயர்வு

மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கனமழை! தமிழகத்தில் வெங்காயம், தக்காளி விலை உயர்வு

நாட்டு தக்காளி, பெங்களூரு தக்காளி கிலோவுக்கு தலா 10 ரூபாய் அதிகரித்து, 35 முதல் 45 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக மீண்டும் வெங்காயத்தின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.

தமிழக சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பெரிய வெங்காயம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது அங்கு மழை பெய்து வருவதால் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நாசிக் வெங்காயம், தற்போது 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல், ஆந்திரா வெங்காயம் 30 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோவுக்கு 20 ரூபாய் வரை உயர்ந்து, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், தக்காளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. நாட்டு தக்காளி, பெங்களூரு தக்காளி கிலோவுக்கு தலா 10 ரூபாய் அதிகரித்து, 35 முதல் 45 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை குறைந்து, நிலைமை சீரானால் மட்டுமே விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வெங்காயம், தக்காளியை போலவே கேரட், உருளை, கோஸ், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: