ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மீண்டும் உச்சத்தில் சின்ன வெங்காயம் விலை..!

மீண்டும் உச்சத்தில் சின்ன வெங்காயம் விலை..!

உச்சத்தில் சின்ன வெங்காயம் விலை..

உச்சத்தில் சின்ன வெங்காயம் விலை..

தொடர் மழை மற்றும் பதுக்கல் காரணமாக நெல்லையில் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நெல்லை மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் நூறு ரூபாயை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாகவே வெங்காய வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்லாரி வெங்காயம், சின்ன வெங்காயத்தின் விலை உயரத் தொடங்கியது. 100 ரூபாய்க்கும் அதிகமாக விலை உயர்ந்த நிலையில் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக அங்கு இருந்து வெங்காயம் வரத்து இல்லாததால் விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

  வெளி மாநிலங்களில் மழைப்பொழிவு குறைந்து பல்லாரி வெங்காயம் வரத் தொடங்கி நிலையில், பல்லாரி வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியது. ஆனால் சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயத்தின் விலை சற்று குறைந்து 80 ரூபாய் என்ற விலையில் நீடித்தது. தற்போது விலை மீண்டும் உயர்ந்து நெல்லை மாவட்டத்தில் சாம்பார் வெங்காயம் விலை 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

  Also read: தினசரி வாசிப்பு பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது தெரியுமா?

  மொத்த விலைக் கடைகளில் 90 ரூபாய் விலைக்கு விற்கப்படும் நிலையில், திருநெல்வேலி உழவர் சந்தையில் 92 ரூபாய்க்கு சின்னவெங்காயம் விற்கப்படுகிறது. தினசரி சந்தைகள் சிறிய கடைகளில் 110 ரூபாய் வரை சின்னவெங்காயம் விற்கப்படுகிறது. 80 ரூபாய் வரை அதன் விலை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்ந்து 110 ரூபாய் வரை விற்கப்படுவது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

  இதுகுறித்து பாளையங்கோட்டை தினசரி சந்தை வியாபாரிகள் கூறுகையில், தினசரி சந்தையில் 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை வெங்காயம் விற்கப்படுகிறது. நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக உள்ளூர் சின்ன வெங்காயம் வரத்து மிகவும் குறைந்துள்ளது. தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதியில் மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் வெங்காயம் அறுவடைசெய்ய முடியாததால் வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பழைய வெங்காயம் கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. தற்போது உள்ள புதிய வெங்காயம் வந்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது. அத்தோடு வெங்காயம் பதுக்குவோரைக் கண்டுபிடித்து வெங்காயத்தை வெளிக்கொண்டு வந்தால், விலை குறைய ஏதுவாக அமையும் என தெரிவித்தனர்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Rizwan
  First published:

  Tags: Nellai, Onion Price