• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வெங்காயம் இறக்குமதி செய்த பிரபல தொழிலதிபர் மகனிடம் மோசடி செய்த லாரி டிரைவர்!

வெங்காயம் இறக்குமதி செய்த பிரபல தொழிலதிபர் மகனிடம் மோசடி செய்த லாரி டிரைவர்!

வெங்காயம்

வெங்காயம்

  • Share this:
    வெங்காயம் இறக்குமதியில், பிரபல துணிக்கடை உரிமையாளர் மகனிடம் லாரி டிரைவர் ஒருவர் வங்கி கணக்கு எண்ணை மாற்றி கொடுத்து, ரூ.8 லட்சம் மோசடி செய்துள்ளார்.

    சென்னை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் உரிமையாளரின் மகன் சுந்தரலிங்கம் நாசிக்கில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் ரூ.8 லட்சத்துக்கு சுந்தரலிங்கம் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளார்.

    வெங்காயம் அனுப்பியவரின் வங்கி கணக்கு எண்ணை மறைத்த லாரி ஓட்டுநர் தன்னுடைய வங்கி எண்ணை சுந்தரலிங்கத்திடம் கொடுத்துள்ளார்.

    நாசிக் வெங்காய வியாபாரியுடைய வங்கி கணக்கு எண் நினைத்து ரூ.8 லட்சத்தை ஓட்டுநர் பிரகாஷின் கணக்கில் செலுத்தியுள்ளார்.

    இதுகுறித்து போனில் தொடர்பு கோண்டு கேட்டதற்கு பணம் தரமுடியாது என சொல்லிவிட்டு மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார் .

    இதுகுறித்து சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சுந்தரலிங்கம் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஓட்டுநர் பிரகாஷை தேடி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: