Home /News /tamil-nadu /

'திராவிடம்' ஒற்றை வார்த்தை ட்வீட் ட்ரெண்டிஙகில் இணைந்த முதல்வர் ஸ்டாலின் - பின்னணி என்ன?

'திராவிடம்' ஒற்றை வார்த்தை ட்வீட் ட்ரெண்டிஙகில் இணைந்த முதல்வர் ஸ்டாலின் - பின்னணி என்ன?

ஸ்டாலின் ட்வீட்

ஸ்டாலின் ட்வீட்

அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ‘எடப்பாடியார்’ என ட்வீட் செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    ட்விட்டரில் இன்று காலை முதலே பலரும் ஒரு சொல்லில் ட்வீட் செய்து வருகின்றனர். தனி நபர்கள், வணிக நிறுவனங்கள், அரசியல் கட்சிகளில் அக்கவுண்ட்கள் என அனைத்து பக்கங்களிலும் இந்த ஒரு வார்த்தை ட்வீட் தான் ட்ரெண்டிங்க்கில் உள்ளது.

    இது என்ன என தேடி பார்த்த போது அமெரிக்காவில் உள்ள ரயில் சேவை நிறுவனமான ஆம்ட்ராக், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், செப்டம்பர் 2 அதிகாலை 12:30 மணிக்கு 'Trains' ரயில்கள் என ஒரு வார்த்தையில் ட்வீட் செய்திருந்தது. இதனையடுத்து பலரும் இதே போல ட்வீட் செய்ய தொடங்கினர்.



    கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஐசிசியின் ட்விட்டர் பக்கம் இரண்டும் கிரிக்கெட் என ட்வீட் செய்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனநாயகம் என ட்வீட் செய்தார். அதேபோல் கூகுள் மேப்ஸ், மேப்ஸ் எனவும் சிறுவர்கள் கண்டு ரசிக்கும் WWE ரெஸ்லிங் என பல்வேறு நிறுவனங்கள் பல ட்வீட்கள் செய்தனர்.







    இந்நிலையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சி தலைவர்களிடையே இந்த ஒரு வார்த்தை ட்வீட் ட்ரெண்டாகி வருகிறது. நாம் தமிழர் கட்சி ஒறுங்கிணைப்பாளர் சீமான் ‘தமிழ்தேசியம்’ எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘தமிழன்’ எனவும் ட்வீட் செய்துள்ளார். அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ‘எடப்பாடியார்’ என ட்வீட் செய்துள்ளது.











    இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ‘திராவிடம்’ என ட்வீட் செய்துள்ளார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: CM MK Stalin, Dravidam, Twitter

    அடுத்த செய்தி