• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒரு கால பூஜை திட்ட அர்ச்சகர்களுக்கு உதவி தொகை - விடுப்பட்ட பெயர்களை சேர்க்க அழைப்பு

ஒரு கால பூஜை திட்ட அர்ச்சகர்களுக்கு உதவி தொகை - விடுப்பட்ட பெயர்களை சேர்க்க அழைப்பு

அர்ச்சகர்கள்

அர்ச்சகர்கள்

ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும்.

  • Share this:
    ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயனடையும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளின் விவரங்கள் இணைதளத்தில் வெளியிட்டுள்ளது இந்து சமய அறநிலையத்துறை..
    இந்த பட்டியலில் பெயர் விடுப்பட்டு இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டப்பேரவையில் ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

    அதன் தொடர்ச்சியாக, இத்திட்டம் கடந்த செப்டம்பர் மாதம்  11ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.. இத்திட்டத்தின் கீழ் பயனடையும் 9860 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் பெயர் பட்டியல் இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    Also Read : LKG, UKG உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை - தமிழக அரசு அறிவிப்பு

    இப்பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறவில்லை என கருதும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி 044-28339999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, அலைபேசி எண் மற்றும் பணிபுரியும் திருக்கோயில் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கலாம் .விவரங்கள் சரிபார்க்கப்பட்டு விடுப்பட்ட பெயர்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: