• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காதலிக்க மறுத்த இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்ற ஒருதலைக் காதலர்- ஆந்திராவில் கொடூரம்

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்ற ஒருதலைக் காதலர்- ஆந்திராவில் கொடூரம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை ஒருதலையாக காதலித்த இளைஞர் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து கொலைசெய்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள சித்தன்ன பேட்டையை சேர்ந்த சின்னாரி என்ற இளம் பெண் விஜயவாடாவில் உள்ள கோவிட் சென்டர் ஒன்றில் நர்ஸ் வேலை செய்து வருகிறார். அவரை ஒருதலையாக காதலித்த விஜயவாடாவை சேர்ந்த நாகபூஷணம் என்ற இளைஞர் காதலை ஏற்கக்கோரி சின்னாரிக்கு தொல்லை கொடுத்து வந்தார். இதுதொடர்பாக கண்ணவரம் காவல் நிலையத்தில் இளம்பெண் சின்னாரி புகார் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு முன் போலீசார் நாகபூசணத்தை காவல் நிலையத்திற்கு வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இன்று காலை சின்னாரி பணிக்கு சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்த நாகபூஷணம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போதுதான் உடன் எடுத்து வந்த பெட்ரோல் கேனை திறந்து அதில் இருந்த பெட்ரோலை சின்னாரி மீது ஊற்றி நாகபூசணம் தீ வைத்தார். அலறி துடித்த சின்னரி படுகாயம் அடைந்து அங்கேயே மரணமடைந்தார். தீ வைப்பு சம்பவத்தின்போது நாகபூஷணம் மீதும் தீப்பற்றி படுகாயமடைந்தார். தகவல் அறிந்த கண்ணவரம் போலீசார் விரைந்து சென்று நாகபூஷணத்தை மீட்டு சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


    அங்கு 80 சதவிகிதத்தை காயத்துடன் நாகபூஷணம் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி கண்ணவரம் போலீசார் நாகபூஷணம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: