ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒருதலைக் காதல் கொடூரம்... வகுப்பறையிலேயே ஆசிரியை குத்திக்கொலை...!

ஒருதலைக் காதல் கொடூரம்... வகுப்பறையிலேயே ஆசிரியை குத்திக்கொலை...!

கொலையில் முடிந்த ஒருதலை காதல்

கொலையில் முடிந்த ஒருதலை காதல்

வகுப்பறையில் அமர்ந்து இருந்த ரம்யாவை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து ராஜசேகர் தப்பியோடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கடலூர் மாவட்டத்தில் ஒரு தலைக் காதலால் தனியார் பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியில் பணிபுரிபவர் சுப்பிரமணியன் மகள் ரம்யா. இவரை விருட்சம்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் பல ஆண்டுகளாக ஒரு தலையாக காதலித்துள்ளார்.

இவர் காதலை ரம்யாவிடம் வெளிப்படுத்திய போது அதனை ரம்யா ஏற்கவில்லை. இதுகுறித்து பெற்றோரிடம் பேசுமாறு கூறியுள்ளார்.

ரம்யா

கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரம்யாவின் வீட்டிற்கே சென்று பெண் கேட்டும், சாதி மறுப்பு திருமணத்துக்கு பெற்றோர் மறுத்தததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆசிரியை ரம்யாவுக்கு தினமும் தொந்தரவு அளித்து வந்த ராஜசேகர், ஆசிரியை தீர்த்துக் கட்ட முடிவெடுத்து இன்று குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்போது வகுப்பறையில் அமர்ந்து இருந்த ரம்யாவை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து ராஜசேகர் தப்பியோடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார்,  தப்பியோடிய ராஜசேகர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வகுப்பறையிலேயே ஆசிரியை வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also See...

Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Cuddalore