காதலை ஏற்காத 17 வயது சிறுமியை குத்திக்கொன்ற சட்டக்கல்லூரி மாணவர்.. கடும் நடவடிக்கைக்கு முதல்வர் உத்தரவு..

நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பள்ளிச்சிறுமியை சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். ஒரு தலைக்காதல் கொலை வரை சென்றது ஏன்?

நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பள்ளிச்சிறுமியை சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். ஒரு தலைக்காதல் கொலை வரை சென்றது ஏன்?

 • Share this:
  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காஜுவாக்கா நகரைச் சேர்ந்த பதினேழு வயதான பள்ளி மாணவி கொல்லப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 3-ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர் அகில்சாய். அவர், மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அகில்சாய், வரலட்சுமி இருவரின் பொதுவான நண்பர் ராமு. சனிக்கிழமை மாலை சுந்தரய்யா காலனியில் உள்ள சாய்பாபா கோவிலுக்குச் சென்ற மாணவி, அங்கிருந்த ராமுவிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அகில்சாய் இரண்டு பேரும் சிரித்து பேசி கொண்டு இருப்பதைக் கண்டு கடும் கோபம் அடைந்துள்ளார்.

  இரவு 7 மணி அளவில் மாணவிக்கு போன் செய்து வெளியில் வரவழைத்த அகில் சாய், ராமு உடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தது பற்றி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார்.

  பின்னர் வரலட்சுமி உடலை அருகில் உள்ள புதர் ஒன்றில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். வெளியில் சென்ற மகளை நீண்டநேரமாக காணாததால், பெற்றோர் தேடிச் சென்றனர். அப்போது முட்புதரில் வரலட்சுமியின் உடல் கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.

  அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வரலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வரலட்சுமியை கொலை செய்த அகில் சாய், இரண்டு பேருக்கும் பொதுவான நண்பரான ராமு ஆகியோரை பிடித்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  மேலும் படிக்க...கோமாளி வேடமணிந்து கொரோனா மரண எண்ணிக்கையை அறிவித்த சுகாதார அதிகாரி.. ட்விட்டரில் வலுக்கும் கண்டனங்கள்..  மாணவி கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, 17 வயது மாணவி குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். ஒருதலைக்காதல் விவகாரத்தில் பள்ளிச் சிறுமியை சட்டக்கல்லூரி மாணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: