மது குடிப்பதற்காக கத்தி முனையில் மிரட்டி ஒரு சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்த இளைஞர்கள் கைது

செம்மஞ்சேரி காவல் நிலையம்

சென்னையில் தீபாவளி அன்று மது குடிக்க கையில் பணம் இல்லாததால் மதுக்கடைக்கு வந்தவரை கத்தி முனையில் மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  சென்னை சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோயில் ஏரிக்கரை தெருவில் வசித்து வரும் சின்னதுரை (24) கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 14ம் தேதி தீபாவளி அன்று மாலை சுமார் 4:30 மணியளவில் செம்மஞ்சேரி குமரன் நகர் ஓஎம்ஆர் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். மதுபாட்டிலை வாங்கிக்கொண்டு வெளியே வந்த சின்னதுரையை அங்கு வந்த மூன்று பேர் வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க செயின் மற்றும் ஒரு செல்போனைப் பறித்துச் சென்றுள்ளனர்.

  இச்சம்பவம் குறித்து செம்மஞ்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் மாலதியிடம் சின்னத்துரை புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்தனர். அடையார் துணை ஆணையர் உத்தரவின் பேரில் துரைப்பாக்கம் உதவி ஆணையர் லோகநாதன் தலைமையிலான குற்றப்பிரிவு ஆய்வாளர் மாலதி, தலைமைக் காவலர்கள் புஷ்பராஜ், தாமோதரன், திருமுருகன், முதல்நிலை காவலர்கள் வெங்கடேஷ், வினோத் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர்.

  Also read: சென்னைக்கு வெள்ள ஆபத்து.. அரசும், மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் - ராமதாஸ் எச்சரிக்கை

  சம்பவம் நடைபெற்ற டாஸ்மாக் கடையின் அருகில் பாதுகாப்பிற்காக காவல்துறை பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சூர்யா (எ) அஞ்சுகோழி (19), அஜித்குமார் (எ) ஜிங்கிரி (23), சஞ்சய் (19) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  பின்னர் மூவரையும் காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தீபாவளி பண்டிகையின்போது மது அருந்தவும், கஞ்சா புகைக்கவும் கையில் பணம் இல்லாததால் கத்தியைக் காட்டி மிரட்டி தங்க செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டோம் என அவர்கள் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். 18-வயதிற்கு முன்னரே சூர்யா மீது சென்னை பள்ளிக்காரணை காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு நிலுவையிலுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

  துரிதமாக செயல்பட்டு வழிபறி கொள்ளையர்களைக் கைதுசெய்த துரைப்பாக்கம் போலீசாரை அடையார் துணை ஆணையர் விக்ரமன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
  Published by:Rizwan
  First published: