• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தங்கை உடனான காதலை கைவிட மறுத்த இளைஞர் வீடு புகுந்து கொலை - பெண்ணின் அண்ணன் கைது

தங்கை உடனான காதலை கைவிட மறுத்த இளைஞர் வீடு புகுந்து கொலை - பெண்ணின் அண்ணன் கைது

குற்றவாளி மணிவேல்

குற்றவாளி மணிவேல்

சிவகங்கையில், தன் தங்கையின் மீது உள்ள காதலை கைவிட மறுத்தால் காதலனை அவரது வீட்டிற்கே சென்று கத்தியால் குத்தி கொலை செய்த காதலியின் அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சக்திவேல் பொறியியல் படித்து முடித்து உள்ளார். அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் மணிவேல் குடும்பத்திற்கும் கோவில் கட்டுவது சம்பந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில், மணிவேல் தங்கை கீர்த்திகாவுடன் சக்திவேல் அவ்வப்போது பேசி வந்துள்ளார். நாளடைவில் இது காதலாக மலர்ந்துள்ளது. ஏற்கனவே கோயில் கட்டுவது சம்பந்தமாக முன்விரோதத்தில் இரு குடும்பத்தாரும் பேசிக் கொள்ளாத சூழ்நிலையில் இவர்கள் காதல் விவகாரம் மேலும் பகையை உண்டாக்கியது.

    இதனால் கோபமடைந்த மணிவேல், சக்திவேலிடம் தன் தங்கையிடம் பேசுவதை நிறுத்திக் கொள் என்று பல முறை நண்பர்கள் மூலமும் நேரடியாகவும் கூறியுள்ளார். ஆனால் சக்திவேல் பேசுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணிவேல் நேற்று இரவு மது போதையில் சக்திவேலின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    காதலன் சக்திவேல்


    பின்னர், மாடியில் படுத்திருந்த மணிவேலிடம் சென்று நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா? என தான் மறைத்து வைத்து எடுத்து சென்ற கத்தியால், சக்திவேலை கீழே தள்ளி வயிற்றிலும் , நெஞ்சு பகுதியிலும் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்.

    மேலும் படிக்க...பிளஸ் 2 தேர்வில் அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய திருவண்ணாமலை ஆட்சியர்

    இரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேகம்பத்தூர் காவல் துறையினர் தப்பி ஓடிய மணிவேலை தேடி கைது செய்தனர் .

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: