மதுரையில் மூடப்பட்ட கிணற்றின் மேல் கட்டப்பட்ட கட்டிடம் சரிந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு

விபத்துக்கு காரணமான கட்டிட உரிமையாளர் மாதவனை போலீசார் கைதுசெய்துள்ளனர். 

news18
Updated: July 6, 2019, 7:33 AM IST
மதுரையில் மூடப்பட்ட கிணற்றின் மேல் கட்டப்பட்ட கட்டிடம் சரிந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்
news18
Updated: July 6, 2019, 7:33 AM IST
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கட்டுமானப் பணியின் போது கட்டிடம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

செக்கானூரணி பசும்பொன் தெருவில் கான்ட்ராக்டர் மாதவன், தனக்கு சொந்தமான இடத்தில் 2 மாடி கட்டிடம் கட்டி வந்தார். 6 மாதங்களாக கட்டுமானப் பணி நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் திடீரென கட்டிடம் சரிந்து விழுந்தது.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டு கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 பேரை மீட்டனர். இதில், காயமடைந்த இருவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதற்கு பின் 6 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஜேசிபி இயந்திர உதவியுடன் இடிபாடுகளை அகற்றி இரண்டு பேரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில் காசிநாதன் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ராஜசேகர், டிஐஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது கிணறு இருந்த இடத்தை மூடிவிட்டு கட்டிடம் கட்டி வந்தது தெரியவந்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள அருண், பட்டாசு பாலு ஆகியோரை மீட்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தலின்படி மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டிடமும் சேதமடைந்திருப்பதால் கட்டிடத்தின் மேல்புறத்தில் இருந்து இடித்து அகற்றிவிட்டு மீட்பு பணியை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, விபத்துக்கு காரணமான கட்டிட உரிமையாளர் மாதவனை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

Also see...

First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...