பஞ்சுக்கான 1% சந்தை நுழைவு வரி ரத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின்

பஞ்சு மீதான ஒரு விழுக்காடு சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படும் எனவும், அதற்கான சட்டத்திருத்தம் இந்த சட்டமன்றத்தில் கொண்டு வரப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 • Share this:
  சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர், இந்திய தொழில்துறை வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாடு தொழில்துறை வகிப்பதாகவும், தமிழகத்தில் உள்ள 1570 நூற்பாலைகள் மூலம் நூற்கப்படும் நூல் நாட்டின் மொத்த உற்பத்தி திறனில் 45 சதவீதம் என்றும், தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளுக்கு தேவையான 95% பஞ்சு வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும் கூறினார்.

  மேலும், தமிழ்நாடு வேளாண் பொருட்கள் விற்பனைச் சட்டம் 1987 பிரிவு 24ன் படி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு விற்பனை வரி மீது சந்தை நுழைவு வரியாக ஒரு விழுக்காடு விதிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், பஞ்சு மற்றும் நூல் ஆகியவை வேளாண் பொருட்களாக கருதப்பட்டு தமிழகத்தில் ஒரு சதவீதம் சந்தை நுழைவு வரியாக விதிக்கப்படுகிறது என்றும்,சந்தை நுழைவு வரி என்பது பருத்தி கொள்முதலில் மட்டுமே விதிக்கப்பட வேண்டும், மாறாக பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகிய உற்பத்தி பொருட்கள் மீது விதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

  Also read: கட்டட, விவசாய தினக்கூலிகளாக மாறிய தனியார் பள்ளி ஆசிரியர்கள்.. கொரோனா படுத்தும் பாடு!

  இதனால் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் போது சிறு குறு நூற்பாலைகள் தொழில் நிறுவனங்கள் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடுவதாகவும், பஞ்சின் மீதான ஒரு சதவீதம் சந்தை நுழைவு வரி நீக்க வேண்டும் என்பது தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.

  ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்த சந்தை வரியை நீக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை வைத்தததாகவும், தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீதான ஒரு சதவீதம் சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுவதோடு, இதற்கான சட்டத்திருத்தம் நடப்பு சட்டமன்றத்தில் கொண்டு வரப்படும் எனவும் கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: