தமிழகத்தில் இன்று முதல் அமலானது ’ஒரே நாடு ஒரே ரேஷன்’ கார்டு திட்டம்!

தமிழகத்தில் 2.05 கோடி ரேசன் கார்டுகளும் 35,233 நியாயவிலைக் கடைகளும் உள்ளன.

தமிழகத்தில் இன்று முதல் அமலானது ’ஒரே நாடு ஒரே ரேஷன்’ கார்டு திட்டம்!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: January 24, 2020, 9:06 AM IST
  • Share this:
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு முன்னோட்டமாக தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடியில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் கடந்த ஒன்றாம் தேதி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதன் முன்னோட்டமாக தமிழகத்தில் உள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாரணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


அதன்படி முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது ஒரு வாரத்திற்கு செயல்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்துள்ள யாரும் தமிழகத்தில் எந்த நியாயவிலைக் கடையிலும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். ஸ்மார்ட் கார்டு அல்லது ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த செல்போன் எண் ஆகியவற்றுள் ஒன்றைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெறலாம். வேலைக்காக வெளியூர் சென்று பணிபுரிபவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் தற்போது 2 கோடியே 5 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், 35 ஆயிரத்து 233 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
 

 
First published: January 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்