ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆதரவளித்த இபிஎஸ்.. சந்தேகம் எழுப்பும் ஓபிஎஸ் தரப்பு..!

ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆதரவளித்த இபிஎஸ்.. சந்தேகம் எழுப்பும் ஓபிஎஸ் தரப்பு..!

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? என்பது தெரியவில்லை என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்யும்படி மத்திய சட்ட அமைச்சகம் தேசிய சட்ட ஆணையத்தை கேட்டுக் கொண்டது. அதையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய சட்ட ஆணையம் கருத்துகளை கேட்டு கடந்த 2 வாரத்திற்கு முன்பு கடிதம் எழுதி இருந்தது. இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஜனவரி 16ஆம் தேதிக்குள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இதற்கு, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின்கீழ் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வந்தால், அன்றுதான் உண்மையான பொங்கலாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி, தங்களது தரப்பு கருத்துகளையும் விரைவில் தெரிவிக்க இருப்பதாக கூறினார். அதேநேரத்தில் பஞ்சாயத்து ராஜ் வரை கருத்து கேட்க வேண்டும் என்றும், அவை அனைத்தையும் கேட்டு நிறைவேற்றுவதற்குள் தமிழ்நாட்டில் இன்னொரு தேர்தலே வந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

First published:

Tags: AIADMK, Edappadi Palaniswami, O Panneerselvam