ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு இபிஎஸ்க்கு மத்திய அரசு கடிதம்

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு இபிஎஸ்க்கு மத்திய அரசு கடிதம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்க அதிமுக இடைக்கால பொது செயலாளருக்கு இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மக்களவைக்கும் மாநிலங்களுக்கும் தனி தனியாக தேர்தல் நடத்துவதால் செலவை மிச்சப்படுத்தலாம் என மத்திய அரசு கருதுகிறது. இதனை செயல்படுத்த ஆய்வை துவங்கியிள்ள இந்திய சட்ட ஆணையம், மத்திய அரசிடம் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் முன் பங்குதாரர்கள், இந்திய தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், வல்லுனர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது. அந்த அடிப்படையில், அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜனவரி 16 ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி , கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த நவம்பர் 29 அன்று நடைபெற்ற 22வது சட்ட ஆணையத்தின் இரண்டாவது கூட்டத்தில் "ஒரே நேரத்தில் தேர்தல்கள்" பற்றிய வரைவு அறிக்கை பரிசீலிக்கப்பட்டதாகவும், ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது, எந்த வகையிலும் ஜனநாயகம், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு அல்லது நாட்டின் கூட்டாட்சி அரசியல் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துமா ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த, வரைவு அறிக்கையில் விவாதிக்கப்பட்டவை தவிர, வேறு ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா? 21வது சட்ட ஆணையத்தின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏதேனும் அரசியலமைப்பு திட்டத்தை மீறுவதாக உள்ளதா ? உள்ளிட்ட 6 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

சட்ட ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொது செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜி-20 மாநாடு தொடர்பாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு வழங்கியது,

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதிமுகவின் வரவு - செலவு குறித்து விபரங்களை தேர்தல் ஆணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கையெழுத்திட்டு, அதை தாக்கல் செய்திருக்கிறார். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: ADMK, Edappadi palanisamy