ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக ஈபிஎஸ் இடம் மத்திய அரசு கருத்துக் கேட்பு

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக ஈபிஎஸ் இடம் மத்திய அரசு கருத்துக் கேட்பு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலார் எடப்பாடி பழனிசாமியிடம் தேசிய சட்ட ஆணயைம் கருத்து கேட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டில் அடிக்கடி தேர்தல் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, அத்தியாவசிய சேவைகள் தடை, செலவினமும் அதிகம் என்று பல்வேறு சிக்கல்கள் உள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலையும் சட்டப்பேரவை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற திட்டத்தை சட்டக்குழு பரிசீலனை செய்கிறது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தினால் செலவுகளை மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ளலாம். இந்த திட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதால் நாட்டில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளார் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியிடம் இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. ஜி20 மாநட்டு ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் தற்போது அவரிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்தும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற அங்கீகாரம் அவருக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Edappadi palanisamy, EPS