ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒரே நாடு, ஒரே தேர்தல்... ஆதரவு தெரிவித்தது அதிமுக..!

ஒரே நாடு, ஒரே தேர்தல்... ஆதரவு தெரிவித்தது அதிமுக..!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய சட்ட ஆணையத்திற்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் இபிஎஸ் பதில் அனுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய சட்ட ஆணையம் கருத்துக்களை கேட்டு கடந்த 2 வாரத்திற்கு முன்பு கடிதம் எழுதி இருந்தது.

ஜனவரி 16ஆம் தேதிக்குள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் அதிமுக தரப்பிலிருந்து தற்போது இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.  அதிமுகவின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக அதன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது.

First published:

Tags: AIADMK, EPS, One country one election