Home /News /tamil-nadu /

ஒரே நாடு, ஒரே தேர்தல் - பாஜக முழக்கத்தை முன்வைக்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி

ஒரே நாடு, ஒரே தேர்தல் - பாஜக முழக்கத்தை முன்வைக்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

One Nation One Election: மேற்கு வங்கத்தை போல தமிழ்நாடு சட்டமன்றமும் முடக்க நேரிடும் என எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பேசி வரும் கருத்துகள் விவாதத்துக்குள்ளாகியுள்ளன.

ஒரே நாடு, ஒரே தேர்தல்.. என தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவது ஏன்? இது தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ? பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகிய போதும், பாஜகவின் முழக்கத்தை முன்வைக்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி… 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 8 முனை போட்டி என்றபோதும், பரப்புரை களத்தில் வேகம் காட்டுவது தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் தான். பரஸ்பர குற்றச்சாட்டுகள், ஆவேச சவால்கள் என பரபரக்கிறது தேர்தல் பரப்புரைக் களம். பரப்புரையின் போது அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசிவரும் கருத்துகள் இப்போது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஒரேநாடு ஒரே தேர்தல் 2024ம் ஆண்டில் அமலாகும்.. இன்னும் 27 அமாவாசைகள் தி.மு.க ஆட்சி நீடிக்காது… மேற்கு வங்கத்தை போல தமிழ்நாடு சட்டமன்றமும் முடக்க நேரிடும் என இவர் அடுத்தடுத்து பேசி வரும் கருத்துகள் விவாதத்துக்குள்ளாகியுள்ளன.

Also Read: தஞ்சை மாணவி வழக்கு: பாஜக நியாயத்தின் பக்கம் இருப்பதை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பு - அண்ணாமலை

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க உடன் இணக்கமாக செல்வது பாதுகாப்பானது என்ற காரணத்தோடுதான் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி எடுத்திருப்பதாகவே தோன்றுவதாக கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் துரை கருணா. மேலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க ஆட்சிக்கு வரும் என்று கூறுவதன் மூலம் தொண்டர்களை உற்சாகப்படுத்த இயலும் என அவர் நினைக்கக்கூடும் என்கிறார் துரை கருணா.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகினாலும், பா.ஜ.க-வுடன் உறவைத் தொடர அ.தி.மு.க விரும்புவதன் வெளிப்பாடே இது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ரங்கநாதன். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது 2024ம் ஆண்டில் சாத்தியமாவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தான் தேர்தல் ஆணையமே தெரிவித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி இந்த கருத்தை கூறுவது என்பது, பா.ஜ.க-வை விட்டு விலகி வரும் மனநிலையில் அ.தி..முக இல்லை என்பதையே உணர்த்துகிறது என்றார்.

Also Read: பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் தி.மு.க சிம்ம சொப்பனமாக உள்ளது - உதய நிதி ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு, தேர்தலில் எந்த வகையிலும் எதிரொலிக்காது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன். உள்ளாட்சித் தேர்தலில் அந்த பகுதியின் பிரச்னை, வேட்பாளரே வாக்குகளை முடிவு செய்வார் என்றும், தேசிய பிரச்னைகள் தேர்தலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் சொல்கிறார்.

இதுவரை இல்லாத வகையில், மாநில மற்றும் தேசிய அளவிலான பிரச்னைகள் உள்ளாட்சித் தேர்தலில் முன்வைக்கப்படுகின்றன. இன்னும் பரப்புரை ஓய இரு தினங்களே உள்ள நிலையில், பரப்புரைக்களம் இன்னும் சூடுபிடிக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: ADMK, DMK, Edappadi palanisamy, MK Stalin, Politics

அடுத்த செய்தி