நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மாணவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் இதுவரை 5 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர், ஒரு இடைத்தரகர் என மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளியாகியுள்ளனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சென்னை எஸ்.ஆர்,எம் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி போலீசார் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையில் அவர் மீதான ஆள்மாறாட்ட புகார் உறுதியானால் மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். இந்த விசாரணையில் இடைத்தரகர் ரஷீத் குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.