தமிழகத்தில் மேலும் ஒரு நீட் தேர்வு எழுதவிருந்த மாணவர் தற்கொலை

தமிழகத்தில் மேலும் ஒரு நீட் தேர்வு எழுதவிருந்த மாணவர் தற்கொலை

மாதிரிப் படம்

தமிழகத்தில் நீட் தேர்வினால் ஒரே நாளில் 2 மாணவர்கள் தற்கொலை செய்து உள்ள சம்பவம் பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

 • Share this:
  நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவியை ஜோதி துர்காவைத் தொடர்ந்து தருமபுரியிலும் ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  மதுரை ரிசர்வ் லயன் பகுதியிலுள்ள பட்டாலியன் குடியிருப்பைச் சேர்ந்த முருகசுந்தரம் காவல்துறை சார்பு ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். இவரது 3 பிள்ளைகளில் 2-வது மகள் ஜோதி துர்கா மருத்துவர் கனவுடன் நீட் தேர்விற்கு தயாராகிவந்தார்.

  கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் இருந்த அவர், இந்த முறை தேர்ச்சியடையும் உத்வேகத்துடன், பயிற்சி மையத்திற்கு சென்றும், வீட்டிலும் இரவு, பகலாக படித்துவந்தார். நீட் தேர்விற்கு ஒரு நாள் தான் இருக்கிறது என்ற நிலையில் படிப்பில் மூழ்கியிருந்தார்.

  ஆனால், இந்த முறையும் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சமடைந்த அவர், உருக்கமான ஆடியோ ஒன்றை பதிவு செய்துவைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இந்நிலையில் நாளை நீட் எழுத இருந்த தருமபுரி மாணவன் ஆதித்யா என்பவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது தந்தை மணிவன்ணன் மற்றும் தாய் சித்ரா இலக்கியம்பட்டியில் குடியிருந்து வருகின்றனர்.  நீட் தேர்வுக்காக தயராகி வந்த மாணவன் திடீரென இந்த முடிவை எடுத்துள்ளது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வினால் ஒரே நாளில் 2 மாணவர்கள் தற்கொலை செய்து உள்ள சம்பவம் பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
   
  Published by:Vijay R
  First published: