மதுரையில் மீண்டும் மற்றொரு ஜவுளி குடோனில் தீ விபத்து

மதுரை தீ விபத்து

மதுரையில் ஜவுளி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தீயணைப்பு படை வீரர்கள் உயிர் இழந்த நிலையில் அதன் அருகிலேயே பிரபல ஜவுளிக் கடை குடோனில் ஏற்பட்ட தீ விபத்து கடும் போராட்டத்திற்குப் பின் அணைக்கப்பட்டது.

  • Share this:
மதுரை விளக்குத்தூண் அருகே மஞ்சனக்கார 1-வது தெருவில் உள்ள சஞ்சய் டெக்ஸ்டைல் என்ற நிறுவனத்தில் தீபாவளியன்று அதிகாலை இரண்டு மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர்கள் இருவர் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது. இந்தச் சம்பவம் நெஞ்சை விட்டு அகலும் முன் மஞ்சனக்கார இரண்டாவது தெருவில் உள்ள மதுரையின் பிரபல ஜவுளிக்கடையான ஏ.கே‌ .அகமத் நிறுவனத்தின்  குடோனில் நேற்று திடீரென தீப்பற்றியது.

திடீர்நகர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடினர். சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதே பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் கட்டடம் இடிந்து விழுந்த 2 பேர் உயிரிழந்ததால், கட்டுமான பணியின் திறம் தெரியாமல் உள்ளே செல்வதை தவிர்த்து தீயணைப்பு படையினர் லாவகமாக தீயை அணைத்து பேரும் விபத்தை தவித்தனர்.

அதே நேரத்தில் தீப்பற்றியதில் நிறைய பொருட் சேதம் ஏற்பட்டதாக உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published: