Black fungus | மதுரையில் கரும்பூஞ்சை தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு!

கருப்பு பூஞ்சை

அவருக்கு கரும்பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே நேரம், தொற்று மூளைக்குள் பரவியதால் அவர் மிகவும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

  • Share this:
மதுரையில் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

மதுரை போடிநாயக்கனூரை சேர்ந்தவர் ஜெயந்தி (38). இவர் கடந்த மே 19 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து, மே 31 ஆம் தேதியன்று அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடலின் வலதுபுற பாகங்கள் செயல் இழந்தன.

அதனால் ஜூன் 1 ஆம் தேதி இரவு மேல் சிகிச்சைக்காக மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரும்பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே நேரம், தொற்று மூளைக்குள் பரவியதால் அவர் மிகவும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், ஜெயந்தி சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார். கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை வியாதி மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாகவே ஜெயந்திக்கு கரும்பூஞ்சை நோய் தாக்கியதாக அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, திண்டுக்கல்லை சேர்ந்த ஆண் ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று உயிரிழந்து இருந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: