முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னை ஐ.ஐ.டியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை- காவல்துறை விசாரணை

சென்னை ஐ.ஐ.டியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை- காவல்துறை விசாரணை

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

Chennai IIT | சென்னை ஐ.ஐ.டியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை ஐ.ஐ.டியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதுமுள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்தர மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர் கதையாக இருந்துவருகிறது. சென்னை ஐ.ஐ.டியிலும் கடந்த சில வருடங்களாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்துவருகிறது.

தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களாகவும் இருந்துவருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐ.ஐ.டியில் பயின்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பர்ட் என்ற விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் சென்னை ஐ.ஐ.டியில் ஆராய்ச்சி மாணவராக பயின்று வந்தார். அதேநேரத்தில் மற்றொரு மாணவரும் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாக தற்போது சென்னை ஐ.ஐ.டி மாணவர் ஒருவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மும்பை ஐஐடியில் பட்டியலின மாணவர் தற்கொலைக்கு இதுதான் காரணம் - மாணவர் அமைப்பு பரபரப்பு குற்றச்சாட்டு!

பி டெக் படித்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விடுதி நிர்வாகம் அளித்த தகவல் பேரில் கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாத கணக்கின்படி, ஆறு ஆண்டுகளில் சென்னை ஐ.ஐ.டியில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர்.

First published:

Tags: Chennai IIT