சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து, 105 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், தொடர்ந்து ஆறாவது நாளாக டீசலும் நூறு ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இன்று டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலியாக, இந்தியாவில் நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.
கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில், பெட்ரோல்-டீசலுக்கான பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய்க்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் தேவை அதிகரிப்பு மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன, கணிசமான அளவுக்கு உற்பத்தியை பெரும்பாலான நாடுகள் அதிகரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீது மத்திய-மாநில அரசுகள் அதிக அளவில் வரி விதித்துள்ளன. இதுவும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ கடந்து விற்பனையாகிறது.
Must Read : ரேஷன் கடைகள் மூலம் சிலிண்டர் விற்பனை : மத்திய அரசு திட்டம்
இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து 105 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து, 101 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனையாகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.