ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெய்வேலியில் லாரி மோதி ஒருவர் பலி - லாரிகளுக்கு தீ வைப்பு, பதற்றம், போலீசார் குவிப்பு

நெய்வேலியில் லாரி மோதி ஒருவர் பலி - லாரிகளுக்கு தீ வைப்பு, பதற்றம், போலீசார் குவிப்பு

எரிந்து கொண்டிருக்கும் லாரி

எரிந்து கொண்டிருக்கும் லாரி

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு என்.எல்.சி. நிர்வாகம் இழப்பீடு வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் மறுப்பு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

    நெய்வேலி என்.எல்.சி நிலக்கரி சாம்பல் ஏற்றி வந்த லாரி மோதி ஒருவர் உயிரிழந்ததால், 5 லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டது, 30 லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டன. பதற்றம் காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் நெய்வேலி, என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் இருந்து அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சிமெண்ட ஆலைகளுக்கு லாரிகள் மூலம் சாம்பல் ஏற்றுமதி செய்யப்படுறது.

    அவ்வாறு, அனல்மின் நிலையத்தில் இருந்து சாம்பலை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மேலக்குப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவர் தனது மனைவி திலகவதியுடன் விருத்தாசலம் அருகே உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அந்த தம்பதி, மேலக்குப்பம் அருகே வந்தபோது, சாம்பலை ஏற்றி வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் லாரியில் சிக்கி கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி திலகவதி படுகாயமடைந்தார்.

    இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்த 5 லாரிகளுக்கு தீ வைத்ததால் எறித்தனர்.மேலும், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருக்கும் அனல் மின் நிலையத்தில் இருந்து சாம்பல் ஏற்றி வந்த லாரி 30-க்கு மேற்பட்ட லாரிகளின் கண்ணாடிகளை உடைத்த நொறுக்கினர்.

    இந்நிலையில், லாரி ஓட்டுநர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் அந்த பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அனைத்தனர். இதற்கிடையில், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதனால் மேலகுப்பம், மந்தாரகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    Must Read : பேருந்து கட்டணம் தற்போது உயராது, ஆனால் - அமைச்சர் சூப்பர் அறிவிப்பு

    பின்னர் இறந்தவரின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு என்எல்சி நிர்வாகம் இழப்பீடு வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இருப்பினும் ஆலைக்கு வெளியே விபத்து நிகழ்ந்ததால் தங்களால் இழப்பீடு தர முடியாது என என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Published by:Suresh V
    First published:

    Tags: Neyveli, NLC