மதுரையில் வீட்டில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு.. 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்..

மாதிரிப் படம்

மதுரை பாலரங்காபுரம் பகுகுதியில் வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

 • Share this:
  மதுரை பாலரங்காபுரம், பகுதியில் தனியாக வசித்து வந்துள்ள சரவணன் என்பவரது வீட்டில், இன்று அதிகாலை திடீரென சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சரவணன் கருகி பலியானார்.

  சிலிண்டர் வெடித்ததில் அருகே இருந்த ஜிஆர்டி திருமண மண்டபத்தின் ஒரு பக்க சுவர் மற்றும் மேற்கூரை சேதமடைந்து அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதோடு அப்பகுதி முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

  வெடித்து சிதறியதில் இடிபாடுகளில் சிக்கியிருந்த சரவணன் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  மேலும் படிக்க... அரசியல்வாதிகளுக்கு குடும்பம் இடையூறாக இருக்கும்: நடிகை சுஹாசினி

  அதிகாலைப் பொழுதில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: