1 கிலோ ₹50... அரை மணிநேரத்தில் விற்று தீர்ந்த வெங்காயம்!

1 கிலோ ₹50...  அரை மணிநேரத்தில் விற்று தீர்ந்த வெங்காயம்!
  • News18
  • Last Updated: December 10, 2019, 10:13 AM IST
  • Share this:
திருவள்ளூரில் வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்ததால் மக்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கி சென்றனர்.

திருவள்ளூரில் நேதாஜி சாலையில் ஆந்திர மாநில வியாபாரி ஒருவர் இரண்டு கிலோ வெங்காயத்தை ரூபாய் 100-க்கு விற்பனை செய்ததுள்ளார். இதனால் முண்டியடித்துக்கொண்டு பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கி சென்றனர்.

வேனில் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தபடி 2 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என்றதும் பெரியவர் முதல் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் வயதான முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் வீட்டில் இருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு ஆர்வத்துடன் வெங்காயத்தை வாங்கி சென்றனர்.


விற்பனைக்கு வந்த அரை மணிநேரத்தில் வேனில் இருந்த மொத்த வெங்காயமும் விற்று தீர்ந்தது என்று வெங்காய வியாபாரி மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

Also see...
First published: December 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading