சிறுமிகளின் ஆபாச படங்களை ட்விட்டரில் பதிவிட்ட பொறியாளர் போக்சோ சட்டத்தில் கைது..

கோப்புப் படம்

சிறுமிகளின் ஆபாச படங்களை ட்விட்டரில் பதிவிட்ட பொறியாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

  • Share this:
சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு அதனை தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவேற்றம் செய்த பொறியாளர் இளவரசன் என்பவரை கடலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் எஸ்.என்.சாவடிரட்சகர் நகரை சேர்ந்தவர் கண்ணன் . இவருடைய மகன் இளவரசன். இவர் ஒரு பொறியாளர். இவர்  தனியார் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுது பார்க்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் . சமீபத்தில் இவர் சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு அதனை தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது .

அதனைத் தொடர்ந்து மற்றவர்களுக்கும் தன்னுடைய செல்போன் மூலமாக அனுப்பியுள்ளார். இதை தேசிய குழந்தைகள் பாலியல் தடுப்பு மைய அதிகாரிகள் கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை குழந்தைகள் நலக்குழுவுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க...ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன் வாங்கித் தராததால் 10-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

அவர்கள் உடனே கடலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட் டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தனர்.
Published by:Vaijayanthi S
First published: