• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

காவல்

காவல்

தமிழக காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஒய்வு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  • Share this:
    தமிழக காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஒய்வு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசுகையில், காவலர்கள் தங்கள் உடல் நலைனை பேணி காத்திட ஏதுவாகவும் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். அதற்கான அரசாணை இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    காவலர்களின் நலனை கருத்த்தில் கொண்டு முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு காவல் பணியில்இடையறாது ஈடுபட்டு சவலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு புத்துணர்ச்சியோடும் உற்சாகத்தோடும் தங்கள் பணியினை அவர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: