Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,722 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,722 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,722 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

    இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 31,810 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2,722 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,96,321 பேராக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து தற்போது 18,687 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 2,413 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டில் 474 பேருக்கும், கோயம்புத்தூரில் 131 பேருக்கும், திருவள்ளூரில் 191 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 87 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி