Home /News /tamil-nadu /

தமிழகத்தில் மேலும் 2,283 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் 2,283 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா

கொரோனா

அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,283 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தினசரி கொரோனா பாதிப்பானது 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

    இந்நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 32,963 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2,283 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 35,10,809 பேராக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து தற்போது 17,858 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 2,707 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டில் 367 பேருக்கும், கோயம்புத்தூரில் 156 பேருக்கும், திருவள்ளூரில் 176 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 102 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி