• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆடு திருடர்களால் கொல்லப்பட்ட எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆடு திருடர்களால் கொல்லப்பட்ட எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்,மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    திருச்சியில் ஆடு கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ரூ 1 கோடி நிதி உதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் நேற்று இரவு இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடு ஒன்றை திருடி சென்றதை பார்த்துள்ளார். இதனையடுத்து அவர்களை பிடிக்க எஸ்எஸ்ஐ பூமிநாதன் முயன்றபோது  அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதால் அவர்களைத் துரத்திப் பிடிக்க பூமிநாதன் முயன்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி எனும் கிராமத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை அருகே வந்தபோது அந்த சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி இருந்ததால் அதைத் தாண்டி செல்ல வழியில்லாமல் அங்கு நின்று உள்ளனர்.

    இதனையடுத்து அவர்களை பின்தொடர்ந்து வந்த எஸ்எஸ்ஐ பூமிநாதன் ஆடு திருட்டு கொள்ளையர்களை பிடிக்க முயன்று உள்ளார்.அப்போது கொள்ளையர்கள் இருவரும் எஸ்எஸ்ஐ பூமியைநாதனை கடுமையாகத் தாக்கியதோடு மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து வந்த கீரனூர் போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Also Read: ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை

    உயிரிழந்த சிறப்பு  உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் , “சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், ரோந்து பணியில் இருக்கும்போது மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரமடைந்தேன். இக்கொடிய சம்பவத்தால் உயிரிழந்த பூமிநாதன், குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடி நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: