'ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம்' நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 3:25 PM IST
  • Share this:
மத்திய அரசு அறிவித்த இந்த திட்டத்துக்கான பணிகள் கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்தன. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் அண்மையில் இந்த திட்டம் சோதனை முறையில் துவங்கப்பட்டது. இதில் எந்த சிக்கலும் எழவில்லை. இதனையடுத்து , அனைத்து மாவட்ட ரேஷன் கடை நிர்வாகிகள், மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.

மேலும் படிக்க...அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் ஓ.பி.எஸ் பெயர் இடம்பெறாதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்



இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் மக்கள் தங்கள் குடும்ப அட்டையை பயன்படுத்தி அருகிலுள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading