திமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி: உசிலம்பட்டி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி: உசிலம்பட்டி ஒதுக்கீடு

அகில இந்திய பார்வர்ட் பிளாக்

இதனால், திமுக 173 தொகுதிகளில் நேரடியாக களம் காண உள்ளது.

 • Share this:
  திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

  அதன்படி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி உசிலம்பட்டியில் உதயசூரியன் சின்னத்தில், பி.வி.கதிரவன் போட்டிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திமுக நேரடியாக போட்டியிடுவதாக இருந்தது 174 தொகுதியானது, தற்போது 173 ஆக உள்ளது.

  திமுக சார்பில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வீதம் 24 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

  Must Read : அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : டிடிவி தினகரன் பெயர் இல்லை

   

  அதேபோல, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை, மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் வீதம் 4 தொகுதிகள் என தற்போதுவரை 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  Published by:Suresh V
  First published: