Home /News /tamil-nadu /

தொடர் மழையால் உயர்ந்தது மல்லிகை பூ விலை... எவ்வளவு தெரியுமா?

தொடர் மழையால் உயர்ந்தது மல்லிகை பூ விலை... எவ்வளவு தெரியுமா?

 பூக்களின் விலை கடும் உயர்வு

பூக்களின் விலை கடும் உயர்வு

மதுரையில்  ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2300 முதல் 2500 க்கு விற்பனையாகிறது.

    தற்போது விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நிறைவடைந்த நிலையில் அடுத்தடுத்த முகூர்த்தம் மற்றும் ஓணம் பண்டிகை களைகட்டத் தொடங்கி உள்ளது. இதனிடையே தொடர்மழையால் விழாக்களுக்கு கிடைக்க வேண்டிய பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில்,  ஆவியூர்,  வளையங்குளம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில்,  மல்லிகை விவசாயம் பிரதானமாக நடைபெறுகின்றது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்து உள்ளது.  ஆனால் வரும் நாட்களில் தொடர் முகூர்த்தம் உள்ளது.  மேலும் 8ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.எனவே, இதன் காரணமாக பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது.   வரத்து குறைவாக உள்ளதால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.

    பூக்களின் விலை நிலவரம் :



















    மல்லிகை பூகிலோ  ரூ.2300 முதல் 2500 வரை
    முல்லை பூகிலோ ரூ.800
    பிச்சி பூகிலோ ரூ.700
    சம்பங்கிகிலோ ரூ.250

    கடந்த வாரம் மல்லிகை கிலோ 1200க்கு  விற்பனையானது. தொடர்ந்து விலை உயர்ந்து தற்போது மல்லிகை ரூ.2500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே நிலை அடுத்த சில நாட்களுக்கு இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    செய்தியாளர் : கருணாகரன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Jasmine, Madurai

    அடுத்த செய்தி