காதலர் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானலில் ரோஜா மற்றும் கொய் மலர்கள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாட உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த காதலர் தினத்தில் முக்கிய பங்கு வகிப்பது ரோஜா மலர்கள்தான்.
என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டாலும், காதலர் தினத்தில் தனது காதலிக்கு ரோஜா பூக்களை கொடுத்து அன்பை வெளிப்படுத்தும் பழக்கம் மாறாத ஒன்றாக உள்ளது. காதலர் தினத்தில் இன்றளவும் மவுசு குறையாத ரோஜா பூக்களும், கொய் மலர்களும் கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் அதிகளவு பயிரிடப்படுகின்றன.
சிவப்பு, வெள்ளை வண்ணங்களில் பூக்கும் இந்த கொய்மலர்கள் காண்போர் மனதை கொள்ளையடிக்கிறது. காதலர் தினத்தையொட்டி, ரோஜா மற்றும் கொய் மலர்கள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மலர்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொடைக்கானலில் குளிர்பதன வசதி இல்லாத காரணத்தால், பெங்களூருக்கு அனுப்பப்படும் மலர்கள், அங்கு குளிரூட்டப்பட்ட அறைகளில் தரம் பிரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தங்களது பகுதியிலும் குளிர்பதனிடும் அறைகளை அரசு ஏற்படுத்தி கொடுத்தால் மலர்கள் மட்டுமல்லாது காய்கறிகள், பழங்களை தரம்பிரித்து மற்ற நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யலாம் என விவசாயிகள் கூறுகின்றனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.