இமானுவேல் சேகரனின் நினைவு தினம் - ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டத்திலும் 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மட்டும் 16 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது.

இமானுவேல் சேகரனின் நினைவு தினம் - ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை
ஸ்டாலின் மரியாதை
  • News18
  • Last Updated: September 11, 2019, 2:42 PM IST
  • Share this:
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிவகங்கையிலும் 3,000 மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இமானுவேல் சேகரனின் நினைவுதினம், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அக்கட்சி எம்.பி கனிமொழி உள்ளிட்ட கட்சியினர். டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டத்திலும் 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மட்டும் 16 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது.

மேலும் பாதுகாப்பு பணியில் சிசிடிவி கேமிராக்கள் பொருந்திய 17 அதிவிரைவு படை வாகனங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

Also see...

First published: September 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்