திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி!
திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி!
செந்தில் பாலாஜி
4 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, அரவக்குறிச்சியில் பா.க.செல்வமும், திருப்பரங்குன்றத்தில் ரேவதியும் போட்டியிடுகின்றனர். சூலூர் சட்டமன்ற தொகுதியில் வழக்கறிஞர் விஜயராகவனும், ஓட்டப்பிடாரம் தனி தொகுதியில் அகல்யாவும் களம் காண்கின்றனர்.
சட்டமன்ற இடைத்தேர்தல் 22 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக திமுக சார்பில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு வருகிற மே 19-ம் தேதி கடைசிக் கட்டமாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், திமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார்.
மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் கரூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் வந்திருந்தார். அப்போது செய்தியாளரிடம் பேசிய செந்தில் பாலாஜி, சட்டமன்ற இடைத்தேர்தல் 22 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, 4 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, அரவக்குறிச்சியில் பா.க.செல்வமும், திருப்பரங்குன்றத்தில் ரேவதியும் போட்டியிடுகின்றனர். சூலூர் சட்டமன்றத் தொகுதியில் வழக்கறிஞர் விஜயராகவனும், ஓட்டப்பிடாரம் தனி தொகுதியில் அகல்யாவும் களம் காண்கின்றனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.