தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் அக். 30, 31-ல் ஒட்டுமொத்த பணி புறக்கணிப்பு!

வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் ஒட்டுமொத்த பணிகளையும் புறக்கணிக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் மாநில தலைவர் செந்தில் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் அக். 30, 31-ல் ஒட்டுமொத்த பணி புறக்கணிப்பு!
மாதிரி படம்
  • News18
  • Last Updated: October 28, 2019, 1:29 PM IST
  • Share this:
ஊதிய உயர்வு, மேல்படிப்பில் இட ஒதுக்கீடு கோரி அக்டோபர் 30, 31-ம் தேதிகளில் அரசு மருத்துவர்கள் ஒட்டு மொத்தமாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குதல், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை உயர்த்துதல், மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய தமிழக அரசு, 6 வாரத்தில் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தது. ஆனால், 10 வாரங்களை கடந்த நிலையில் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனக் கூறி கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் 18,000 மேற்பட்ட அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் ஒட்டுமொத்த பணிகளையும் புறக்கணிக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் மாநில தலைவர் செந்தில் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சையை தவிர அனைத்து பணிகளையும் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தார்.

Also see...

Loading...

First published: October 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com