விழாக்காலங்களில் தனியார் பேருந்து கட்டணங்களைத் தெளிவாக நிர்ணயிக்க வேண்டும்- மக்கள் கோரிக்கை

ஆம்னி பேருந்து நிறுவனங்களே நிர்ணயம் செய்ததால் வழக்கமாக 600ல் இருந்து 1000 வரை இருக்கும் கட்டணம் விழா காலங்களில் 1500 முதல் 2500 ரூபாய் வரை உயர்ந்துவிடுகிறது

விழாக்காலங்களில் தனியார் பேருந்து கட்டணங்களைத் தெளிவாக நிர்ணயிக்க வேண்டும்- மக்கள் கோரிக்கை
கோப்புப் படம்
  • Share this:
பொங்கல் திருநாளையொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமான பொதுமக்கள் ரயில், பேருந்து, விமானம் என பல்வேறு போக்குவரத்துகளை பயன்படுத்தி வருகின்றனர், இதில் அதிகமான மக்கள் அரசு பேருந்தை நம்பியே இருக்கின்றனர்.

ஆனால் அரசு பேருந்துகளில் போதிய வசதிகள் இன்மையும், குறிப்பிட்ட நேரத்தில் வாகனத்தை இயக்காமல் இருப்பதாலும், பொதுமக்கள் தனியார் பேருந்துகளை நாடிவருகின்றனர். இந்த நிலையில் அரசு பேருந்து கட்டணத்தைவிட தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணங்களை வசூல் செய்து வருகின்றனர்.

சாதாரண நாட்களில் ஒரு கட்டணமும் வார இறுதி நாட்களில் ஒரு கட்டணமும் என ஆம்னி பேருந்துகள் வசூல் செய்கின்றன. அதிக கட்டணம் என்றாலும் வசதியான பயணம் என்பதால் பெரும்பாலானோர் ஆம்னி பேருந்துகளையே விரும்புகின்றனர். இந்த சூழலை உணர்ந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடந்த ஆண்டுகளில் அதிகக் கட்டணம் வாங்குவதாக எழுந்த புகாரையடுத்து அவர்களின் சங்கங்கள் ஒன்றுகூடி விழாகாலங்களில் ஆம்னி பேருந்து கட்டணம் என புதிய கட்டணத்தை ஏற்படுத்தி அதையே வசூல் செய்து வருகின்றனர்.


இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து ஆம்னி உரிமையாளர்களிடம் கேட்ட போது விழாகால கட்டணம் அதிக கட்டணம் இல்லை என விளக்கம் தருகின்றனர். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டால், ’ஆம்னி பேருந்து கட்டணம் சரியான முறையில் தான் வசூல் செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில் ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு இடையேன போட்டியின் காரணமாக குறைக்கபடும் கட்டணம் விழாகாலங்களில் சரியான கட்டணத்தைப் பெறுகின்றனர்’ எனத் தெரிவித்தார்.

அதிகக் கட்டணம் பெற்றால் புகார் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் கூறியுள்ள நிலையில் அதிக கட்டணத்தையே நிர்ணய கட்டணமாக மாற்றிவிட்டதால் மக்களுக்கு புகார் அளித்தும் பலன் இல்லை என்ற மனநிலை உருவாகி வருகிறது. விழா காலக்கட்டணம் என பெற்று வரும் அதிக கட்டணத்தை ஆம்னி பேருந்து நிறுவனங்களே நிர்ணயம் செய்ததால் வழக்கமாக 600ல் இருந்து 1000 வரை இருக்கும் கட்டணம் விழா காலங்களில் 1500 முதல் 2500 ரூபாய் வரை உயர்ந்துவிடுகிறது எனவே அரசே தனியார் பேருந்து இருக்கையை தெளிவாக நிர்ணயம் செய்ய வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.மேலும் பார்க்க: அழவைத்த அஜித், சிரிக்கவைத்த சிவா... விஸ்வாசம் படம் ரசிகர்களுக்கு எப்படி..?
First published: January 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading