Home /News /tamil-nadu /

தீபாவளி பண்டிகையொட்டி விண்ணை முட்டும் ஆம்னி பேருந்து கட்டணம்! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

தீபாவளி பண்டிகையொட்டி விண்ணை முட்டும் ஆம்னி பேருந்து கட்டணம்! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

ஆம்னி பேருந்து

ஆம்னி பேருந்து

சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வதற்காக பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ள நிலையில் டிக்கெட் விலையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்..

தமிழகத்தில் பண்டிகை காலம் வந்தாலே தனியார் ஆம்னி பேருந்து கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு கடுமையாக உயர்ந்து வருவது வாடிக்கையாகி விட்டது. அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வதற்காக பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். ரயில்களில் முன்பதிவு டிக்கெட்கள் முடிந்துவிட்ட நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து மதுரைக்கு வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்குள் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தீபாவளிக்காக ரூ.2000 முதல்  ரூ.3,100 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கோவைக்கு  ரூ.2500  முதல், அதிகபட்சமாக  ரூ.3,200  வரை தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இதையும் படிங்க: அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்: மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்
 திருநெல்வேலிக்கு ரூ.3000 முதல் அதிகபட்சமாக ரூ.4000 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் விடுமுறை காலங்களில் தொடர்ந்து கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Published by:Arunkumar A
First published:

Tags: Chennai, Diwali, Omni Bus, Ticket booking

அடுத்த செய்தி