Home /News /tamil-nadu /

தீபாவளி பண்டிகை - ஆம்னி பேருந்துகளில் கட்டணம் எவ்வளவு? முழு விவரம் இதோ!

தீபாவளி பண்டிகை - ஆம்னி பேருந்துகளில் கட்டணம் எவ்வளவு? முழு விவரம் இதோ!

ஆம்னி பேருந்து

ஆம்னி பேருந்து

இனி வரும் விழாக்காலங்களில் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களுக்கு மிகாமல் வசூலிக்க, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கட்டண விவரங்களை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

    விழாக்காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான அதிகபட்ச கட்டணத்தை, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நிர்ணயித்திருக்கிறது.

    மேலும் கட்டண விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இனி வரும் விழாக்காலங்களில் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களுக்கு மிகாமல் வசூலிக்க, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், புகார் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    ALSO READ | தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா.. அரசுப்பேருந்துகளில் இன்று முன்பதிவு தொடக்கம்!

    அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு குறைந்தபட்சமாக 690 ரூபாயும், அதிகபட்சமாக 1,940 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலிக்கு குறைந்தபட்ச கட்டணமாக 870 ரூபாயும், அதிகபட்ச கட்டணமாக 2,530 ரூபாயும், மார்த்தாண்டத்துக்கு குறைந்தபட்சமாக 1,030 ரூபாயும், அதிகபட்சமாக மூவாயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவைக்கு குறைந்தபட்ச கட்டணமாக 720 ரூபாயும், அதிகபட்சமாக 2,090 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேலத்துக்கு குறைந்தபட்சமாக 530 ரூபாயும், அதிகபட்சமாக  1,690 ரூபாயும், தேனிக்கு குறைந்தபட்சமாக 740 ரூபாயும், அதிகபட்சமாக 2,130 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Diwali, Omni Bus, Ticket booking

    அடுத்த செய்தி