Home /News /tamil-nadu /

சொந்த ஊரிலிருந்து புறப்பட படையெடுத்த மக்கள்... ஆம்னி பேருந்துகள் கட்டணம் மீண்டும் கடும் உயர்வு

சொந்த ஊரிலிருந்து புறப்பட படையெடுத்த மக்கள்... ஆம்னி பேருந்துகள் கட்டணம் மீண்டும் கடும் உயர்வு

ஆம்னி பேருந்து

ஆம்னி பேருந்து

Omni bus fare hike : கட்டணத்தை மீண்டும் உயர்த்திய தனியார் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    3 நாள் விடுமுறை முடிந்து பலரும் இன்று சென்னை திரும்ப உள்ள நிலையில் தனியார் பேருந்துகளில் மீண்டும் கட்டணம் உயர்ந்துள்ளது.

    சுதந்திர தின விடுமுறையையொட்டி அனைவரும் சொந்த ஊருக்கு சென்ற போது தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் 15-க்கும் மேற்பட்டோர் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகளில், கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பிக் கொடுக்க அறிவுறுத்தினர்.

    இந்நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு சென்று இருந்த நிலையில் , மீண்டும் சென்னைக்கு திரும்பி உள்ளனர். அமைச்சர் ஆய்வு செய்தும் எதையும் கண்டு கொள்ளாத ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீண்டும் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

    ALSO READ | 'மண்டைய உடைச்சிடுவேன்' .. செய்தியாளரை மிரட்டிய சீமான்... வைரலாகும் வீடியோ

    வழக்கமாக கோயம்புத்தூரில் இருந்து சென்னை வருவதற்கு அதிகபட்சமாக 1200 வசூல் செய்து வரும் நிலையில் தற்போது 2500 முதல் 3000 வரை தனியார் பேருந்து செயலிகளின் மூலம் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதேபோல திருச்சியில் இருந்து சென்னை வருவதற்கு அதிகபட்சமாக 900 ரூபாய் கட்டணம் வசூலித்து வந்த நிலையில் தற்போது 2800 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

    மேலும் மதுரை, திருச்செந்தூர் , கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு வழக்கமாக வசூலிக்கப்படும் தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக தனியார் பேருந்து தற்போது கட்டணத்தை உயர்த்தி உள்ளது. கட்டணத்தை மீண்டும் உயர்த்திய தனியார் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Omni Bus

    அடுத்த செய்தி