Home /News /tamil-nadu /

3 மணி நேரத்தில் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸைக் கண்டறியும் வசதி தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம்

3 மணி நேரத்தில் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸைக் கண்டறியும் வசதி தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம்

ஒமிக்ரான் வைரஸ்

ஒமிக்ரான் வைரஸ்

1000 மாதிரிகளை பரிசோதனை செய்ய 1.3 லட்சம் செலவாகும். இந்த கிட்டுகள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சார்பில் ஆய்வகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    கொரோனாவை விட அதிக ஆபத்து உடையது என்று விஞ்ஞானிகளால் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கும் ஒமைக்ரான் வைரஸ், 13 நாடுகளில் பரவியுள்ளது. இதனைத் தடுப்பதற்காக இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸை 3 மணி நேரத்தில் கண்டறியும் வசதி தமிழகத்தில் 12 ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி என சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நான்கு நகரங்களிலும், உள்நாட்டு விமான நிலையங்கள் கொண்ட சேலம், தூக்குக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 அரசு ஆய்வகங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    Taqpath டேக்பாத் என்ற கிட் கொண்டு இந்த 12 ஆய்வகங்களிலும் பரிசோதனை செய்யப்படும். இரண்டாவது முறை தொற்று ஏற்படுவது, தடுப்பூசி செலுத்திய பிறகும் தொற்று ஏற்படுவது, சமூகத்தில் ஒரு இடத்தில் தொற்று குவியல் ஏற்படுவது, குடும்பத்தில் தொற்று குவியல் ஏற்படுவது, கொரோனா பாசிடிவ் ஆன குழந்தைகள், தீவிர நுரையீரல் தொற்றுடன் வரும் இளைஞர்கள், இணை நோய்கள் இல்லாமல் தீவிர கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள், சர்வதேச பயணிகள் ஆகியோருக்கு இந்த Taqpath கிட் பயன்படுத்தப்படும்.

    Also Read : ''இதை செய்ய தாமதப்படுத்தினால் இந்தியா மோசமான விளைவை சந்திக்கலாம்'' : எச்சரிக்கும் கெஜ்ரிவால்

    1000 மாதிரிகளை பரிசோதனை செய்ய 1.3 லட்சம் செலவாகும். இந்த கிட்டுகள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சார்பில் ஆய்வகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    இது குறித்து மாநில பொது சுகாதார ஆய்வகத்தின் துணை இயக்குனர் ராஜு கூறுகையில், " மரபணு பகுப்பாய்வு செய்வதற்கு ஒரு படி முன்னாலேயே மரபணு மாற்றங்களை தெரிந்து கொள்ள இந்த பரிசோதனை நமக்கு உதவுகிறது. விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள 12 அரசு ஆய்வகங்களில் தற்போது இந்த வசதி உள்ளது" என்றார்.

    Also Read : ஸ்புட்னிக் தடுப்பூசி ஒமைக்ரான் வைரஸ்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் - ரஷ்யா

    Taqpath கிட் பயன்படுத்தப்படும் 12 ஆய்வகங்கள் :

    சென்னையில்

    1. மாநில பொது சுகாதார ஆய்வகம்

    2. கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்

    3.சென்னை மருத்துவக் கல்லூரி

    4.கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி

    5.ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

    கோவையில்...

    6.கோவை மருத்துவக் கல்லூரி

    7.ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி

    8.திருச்சி மருத்துவக் கல்லூரி

    9.சேலம் மருத்துவக் கல்லூரி

    10.மதுரை மருத்துவக் கல்லூரி

    11.தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி

    12.கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி

     
    Published by:Musthak
    First published:

    Tags: Omicron, Tamilnadu

    அடுத்த செய்தி